நாளை முதல் திருப்பதியில் விஐபி சிபாரிசு கடித தரிசனம் கிடையாது

திருப்பதி:

திருப்பதி ஏழுமலையானை தினமும் ஆயிரகணக்கான பக்தர்கள் தரிசித்து வருகின்றனர். கோடை விடுமுறை தொடங்கி உள்ளது.

இதனால் பக்தர்கள் வருகை மேலும் அதிகரிக்கும். அதனால் நாளை முதல் விஐபி சிபாசிசு கடிதங்கள் ஏற்கப்பட மாட்டாது என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

திருப்பதியில் கோடை விடுமுறையை முன்னிட்டு வாரத்தில் 3 நாட்களுக்கு விஐபி தரிசனம் ரத்து செய்யப்படுகிறது.
நாளை முதல் ஜூலை 16-ம் தேதி வரை விஐபி சிபாரிசு கடிதங்கள் ஏற்கப்பட மாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.