இன்று இரவு 12 முதல் நாடெங்கும் முழு ஊரடங்கு : பிரதமர் மோடி உரை

டில்லி

கொரோனா வைரஸ் பரவுதல் குறித்து பிரதமர் மோடி தொலைக்காட்சியில் உரையாற்றி  வருகிறார்.

கொரோனா வைரஸ் காரணமாகக் கடந்த ஞாயிறு அன்று பிரதமர் மோடி மக்கள் ஊரடங்கைக் கடைப் பிடிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

ஆயினும் கொரோனா பரவுதல் அதிகரித்துள்ளது.

இன்று இரவு 8 ம்னி முதல் பிரதமர் மோடி தொலைக்காட்சியில் உரையாற்றி வருகிறார்.

அவர் இன்று இரவு 12 மணி முதல் 3 வாரங்களுக்கு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலாக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கொரோனா வைரஸ் சிகிச்சைக்கான உபகரணங்களுக்காகவும் மருத்துவ வசதிகளை வலுவாக்கவும் மத்திய அரசு ரூ.15000 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாக தெரிவித்துள்ளர்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Corona virus, Curfew, from 12 midnight, india, Modi speech, Patrikaidotcom, tamil news, இந்தியா, இரவு 12 மணி, ஊரடங்கு, கொரோனா வைரஸ், மோடி பேச்சு!
-=-