இலங்கையில் இன்று இரவு முதல் நாளை காலை வரை மீண்டும் ஊரடங்கு!

கொழும்பு:

லங்கையில் இன்று இரவு 9 மணி முதல் நாளை அதிகாலை 4 மணி வரை மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களால் ஏற்பட்டுள்ள பதற்றத்தை தவிர்க்க  ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. பின்னர் அது தளர்த்தப்பட்டது.

இந்த நிலையில், தற்போது குண்டு வெடிப்புக்கு ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பு ஏற்றுள்ள நிலையில் இன்று இரவு மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

இலங்கையில் 300-க்கும் மேற்பட்டோரை பலி வாங்கிய தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல்கள் குறித்து ஆய்வு செய்ய தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இலங்கையில் நடத்தப்பட்ட தாக்குதல்போல, இந்தியாவிலும் நடத்தப்படுவதற்கான முயற்சிகள் நடைபெறக் கூடும் என்று என்.ஐ.ஏ. சந்தேகிக்கிறது. இதனால், இலங்கை சென்று அதுகுறித்து ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.