சென்னை : நேற்று இரவு முதல் இன்று காலை வரை 16 பேர் கொரோனாவுக்கு பலி

சென்னை

நேற்று இரவு முதல் இன்று காலை வரை கொரோனாவால் 16 பேர் உயிர் இழந்துள்ளனர்.

 

சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

மரணமடைவோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே செல்கிறது.

நேற்று மாலை வரை சென்னையில் 2008 பேர் மரணம் அடைந்திருந்தனர்.

நேற்று இரவு முதல் இன்று காலை வரை 16 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இதில் அரசு மருத்துவமனைகளில் 13 பேரும் தனியார் மருத்துவமனைகளில் மூவரும் மரணம் அடைந்துள்ளனர்.

அரசு மருத்துவமனைகளில் ராஜிவ் காந்தி மருத்துவமனையில் 7 பேர், கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் 3 பேர், ஓமந்தூரார் மருத்துவமனையில் 2 பேர், ஸ்டான்லி மருத்துவமனையில் ஒருவர் மரணம் அடைந்துள்ளனர்.