ரக்ஷா பந்தன்: உத்தரபிரதேச அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம்

லக்னோ:

ரக்ஷா பந்தன் பண்டிகை நாளை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையை முன்னிட்டு பெண்கள் தங்கள் சகோதரர்கள் மற்றும் சகோதரர்களாகக் கருதுபவர்களுக்கு ராக்கி கட்டி மகிழ்வார்கள்.

இந்நிலையில், ரக்ஷா பந்தனை முன்னிட்டு உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் இயங்கும் அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, அம்மாநில போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘ரக்ஷா பந்தனை முன்னிட்டு ஆகஸ்ட் 25 மற்றும் 26-ம் தேதிகளில் உ.பி. மாநில போக்குவரத்து கழகத்தின் ஏசி மற்றும் ஏசி அல்லாத அனைத்து பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.