ஆன்லைன் உணவு விநியோகம் : அரசின் புதியஅதிரடி உத்தரவு

டில்லி
ன்லைன் உணவு விநியோக நிறுவனங்களுக்கு இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்தியாவில் தற்போது உணவகங்களில் இருந்து உணவு விநியோகம் செய்ய ஆன்லைன் மூலம் ஆர்டர் தரப்படுகிறது. இந்த விநியோகத்தை ஸ்விக்கி, ஸொமொட்டோ, ஃபோட் பாண்டா, உபேர் ஈட்ஸ் ஆகிய நிறுவனங்கள் செய்து வ்ருகின்றன. இந்த நிறுவனங்களுக்கு நாடெங்கும் பெருமளவில் வாடிக்கையாளர்கள் உள்ளனர்.


இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் உணவகங்களுக்கு தர சான்றிதழ் மற்றும் தர நிர்ணய விதிமுறைகள் அளித்துள்ளது. தற்போது இந்த ஆணையம் இந்த விதிமுறைகளை பின் பற்றாத 10500 உணவகங்களை ஆன்லைன் உணவு விநியோக நிறுவனங்களின் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
இந்த ஆன்லைன் உணவு விநியோக நிறுவனங்கள் வாடிக்கையாளர்கள் விருப்பத்துக்கு ஏற்ப அனைத்து உணவகங்களில் இருந்து உணவுகளை விநியோகம் செய்து வந்தன. தற்போது ஆணையம் அனுமதி அளிக்காத உணவகங்களை தங்கள் பட்டியலில் இருந்து நீக்கும் நிலைக்கு நிறுவனங்கள் வந்துள்ளன.
ஆணையத்தின் உத்தரவுக்கு இணங்க ஸ்விக்கி 4 ஆயிரம் உணவகங்களை தனது பட்டியலில் இருந்து நீக்கி உள்ளது. அதே போல் ஸொமோட்டோ 2500 உணவகங்களையும், ஃபுட்பாண்டா 1900 உணவகங்களையும் உபெர் ஈட்ஸ் 2000 உண்வகங்களையும் தங்கள் பட்டியலில் இருந்து நீக்கி உள்ளன.

You may have missed