உயர்ந்துகொண்டே வரும் பெட்ரோல் டீசல் விலை: பெட்ரோல் ரூ. 85.61, டீசல் ரூ. 78.90

சென்னை:

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலையில் ரூ.2.50 மத்திய அரசு குறைத்த நிலையிலும் மீண்டும் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்துகொண்டேதான்  வருகிறது

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்றைய பெட்ரோல் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து, 11 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.85.61 ஆகவும், டீசல் விலை நேற்றைய விலையில் இருந்து 29 காசுகள் உயர்ந்து, லிட்டருக்கு ரூ.78.90 ஆகவும்  விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

நாடு முழுவதும்ட நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை அமலுக்கு வந்தது முதல் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்துகொண்டே வருகிறது. இதன் காரணமாக நடுத்தர வர்க்கத்தினர் பெரும் பாதிப்புடைந்து வருகின்றனர்.