ரியோடி ஜெனிரோ:
லகின் 31வது ஒலிம்பிக் போட்டி பிரேசில், ரியோ யோடிஜெனிரோவில் உள்ள புகழ்பெற்ற மரக்கானா மைதானத்தில் கோலாகலமாக ஆரம்பமானது.
348b
உலக நாடுகளின்  கடுமையான போட்டிகளுக்கிடையே பிரேசில்  ஒலிம்பிக் போட்டி நடத்தும்  வாய்ப்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
பிரேசில் அதிபர் தில்மா ரூசெஃப் மீதான வழக்கு விசாரணை, ஜிகா வைரஸ் அச்சுறுத்தல், பொருளாதார நெருக்கடி, ஊக்க மருந்து விவகாரம், கடல் மாசுபட்டதாக குற்றச்சாட்டு,  ரஷ்ய தடகள அணிக்கு தடை எனப் பல்வேறு பிரச்சினைகளை  தாண்டி வெற்றிகரமாக வரலாற்று சிறப்புமிக்க  ஒலிம்பிக் போட்டிகளை பிரேசில் நடத்துகிறது.
இன்று நடைபெற்ற தொடக்க விழா நிகழ்ச்சிக்காக பல்வேறு வகையான, வண்ணமயமான நிகழ்ச்சிகளை நடத்தி வரலாற்று சிறப்பு மிக்க ஒலிம்பிக் போட்டி தொடங்கி வைத்து பிரேசில் வரலாற்றில் இடம்பெற்றது.
தொடக்க விழா நிகழ்ச்சிகளில் வரவேற்புரை, கொடியேற்றம், விளையாட்டு வீரர்களின் அணிவகுப்பு, ஒலிம்பிக் தீபம் ஏற்றுதல், வீரர்கள், நடுவர்கள், அலுவலர் உறுதிமொழிகள் ஆகியவை இடம்பெறும். இவற்றுடன் பிரேசில் நாட்டின் பண்பாட்டை பிரதி பலிக்கும் வகையில் கலைநிகழ்ச்சிகள் இடம்பெற்றன.
தொடக்க விழாவில் சுமார் 6 ஆயிரம் நடன கலைஞர்கள் கலந்து கொள்ளும் பிரம்மாண்டமான கண்கவர் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. தொடக்க விழாவுக்கு பிரேசில் நாட்டை சேர்ந்த இயக்குநர் பெர்னாண்டோ மெய்ரெல்ஸ் மற்றும் தயாரிப்பாளர் டேனிலா தாமஸ் ஆகியோர்தான் பொறுப்பாளர்களாக உள்ளனர்.
புகழ்பெற்ற நடன அமைப்பாளர் டிபோராக் கோல்கரின் கைவண்ணத்தில் கலக்கல் நடனமும் இடம் பெற்றது. தொடக்க விழா நடைபெறும் மைதானத்தில் 75 ஆயிரம் பேர் அமரும் வசதி செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
தொடக்க விழா மைதானத்தில் பிரேசிலின் கொடி ஏற்றி வைக்கப்பட்டது.
ஒலிம்பிக் தீபத்தை ஏற்றி வைத்தவர் வான்டர் லீ லீமா என்ற வீரர். இவர் என்ற 2004 ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் மாரத்தான் போட்டியில் வெண்கல பதக்கம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரபல கால்பந்து வீரர் பீலே  தீபத்தை ஏற்றி வைப்பதாக இருந்தது. கடைசி நேர பிரச்சினைகளால் அவர் தொடக்க விழா நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதை புறக்கணித்தார். உடல்மில்லை என்று காரணம் சொல்லப்பட்டது.
தொடக்க விழா நிகழ்ச்சியில் வீரர்களின் அணி வகுப்பு இடம் பெற்றது. ஒலிம்பிக் பிறந்த இடமாக கருதப்படும் கீரிஸ் அணி முதலில் அணி வகுத்து செல்ல,  அகர வரிசைப்படி மற்ற நாட்டு அணிகள் வரிசையாக செல்லும். கடைசியாக போட்டியை நடத்தும் பிரேசில் நாட்டு அணியை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் செல்வார்கள்.

இந்தியாவிலிருந்து ரியோ ஒலிம்பிக்கில் 118 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். இந்திய வரலாற்றில் அதிகள அளவிலான வீரர்கள் பங்கேற்பது இதுவே முதன்முறையாகும். இந்திய வீரர் அபிநவ் பிந்ரா தலைமையில் வீரர்கள் மைதானத்தில் அணிவகுத்து சென்றனர்.
இந்த ஒலிம்பிக்கில்தான் முதன் முறை கோசாவோ, தெற்கு சூடான் அணிகள் பங்கேற்கின்றன. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் ஒலிம்பிக் கிராமத்தில் குவிந்துள்ளதால் ரியோ நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
பிரேசிலில் உள்ள புகழ்பெற்ற ஸ்டேடியங்களில் விளையாட்டு போட்டிகள் நடைபெறுகிறது. சாவோ பாவ்லோ, பெல்லோ ஹாரிசோன்டி, சல்வேடார், பிரேசில்லா, மனாஸ் ஆகிய 5 நகரங்களில் உள்ள 33 மைதானங்களில் போட்டிகள் நடைபெற உள்ளன.
பிரபல தடகள வீரர் உசேன் போல்ட் 3-வது முறையாக ஒலிம்பிக்கில் கலந்துகொள்கிறார். ஜமைக்கா நாட்டை சேர்ந்தவர் உசேன் போல்ட்.
அதேபோல் ஒலிம்பிக்கின் தங்க மகனான அமெரிக்காவின், மைக்கல் நீச்சல் குளத்தில் பாய்ந்து செல்ல முழு அளவில் ஆயத்தமாக இருக்கிறார். 31 வயதான பெல்ப்ஸ்/ இதுவரை ஒலிம்பிக் போட்டியில் 18 தங்கப் பதக்கம் உட்பட 22 பதக்கங்கள் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க ஜிம்னாஸ் டிக் வீராங்கனை சைமோன் பில்ஸ், பிரேசில் கால்பந்து நட்சத்திர வீரர் நெய்மர், சிரியாவின் யசுரா மர்தினி, மபிகா உள்ளிட்ட பலர் முதல்முறையாக தங்கப் பதக்கத்தை கைப்பற்றும் முனைப்பில் உள்ளனர்.
மொத்தம் 17 நாட்கள் போட்டிகள் நடைபெறுகிறது. பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகலில் 206 நாடுகளைச் சேர்ந்த வீரர் வீராங்கணைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். மொத்தம் 21 நாட்கள் போட்டிகள்  நடைபெறுகிறது.
மொத்தம் 31 விளையாட்டுகள் ஒலிம்பிங்கில் நடைபெறுகிறது. 41 பிரிவுகளாக விளையாடட்டு போட்டிகள் நடைபெறும்என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த ஒலிம்பிக்கில் முதலாவதாக  ரக்பி செவன்ஸ், கோல்ப் ஆகிய இரண்டு விளையாட்டுகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.
ஒலிம்பிக் போட்டி பாதுகாப்புக் காக 85 ஆயிரம் ராணுவ வீரர்கள், போலீஸார் பணியில் ஈடுபடுத்தப் பட உள்ளனர். இது கடந்த 2012 லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை விட இருமடங்கு அதிகமாகும்.

ஒலிம்பிக் சின்னம் – ஐந்து வளையங்கள் – பஞ்ச பூதங்கள்?
ஒலிம்பிக் சின்னமான ஐந்து வளையங்கள், பூமியில் உள்ள ஐந்து கண்டங்களைக் குறிப்பதாக  சொல்லப்படுகிறது. ஆப்பிரிக்கா, ஐரோப்பா, ஆசியா, இரண்டு அமெரிக்கக் கண்டங்கள், ஆஸ்திரேலியா ஆகியவையே அந்த ஐந்து கண்டங்கள்.
இருந்தபோதும் 1912 ஸ்டாக்ஹோம் ஒலிம்பிக் போட்டிகளில் ஐந்து வளையங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட காலத்தில், அப்போது பங்கேற்ற நாடுகளின் கொடியில் இருந்த ஐந்து வண்ணங்கள் எடுக்கப்பட்டே இந்தச் சின்னம் உருவாக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.
நமது பார்வையில் ஐந்து வளையங்கள் என்பது இயற்கையின் பஞ்ச பூதங்களான, நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம்.
ஒலிம்பிக்கின் குறிக்கோள்: ‘இன்னும் வேகம், இன்னும் உயரம், இன்னும் வலிமை.’
இந்த வாசகத்தை உருவாக்கியவர்: பாதிரியார் ஹென்றி டிடான். 1894-ல் இந்தக் குறிக்கோள் முன்மொழியப் பட்டது.
ஒலிம்பிக் கொடி என்பது வெள்ளை பின்னணியில் ஒன்றோடு மற்றொன்று பிணைந்த நீலம், மஞ்சள், கறுப்பு, பச்சை, சிவப்பு வளையங்களைக் கொண்டது. உலக விளையாட்டு வீரர் வீராங்கனைகள் ஓரிடத்தில் கூடுவதையும் மனிதர்கள் வாழும் ஐந்து கண்டங்களின் ஒருங்கிணைவையும் எடுத்துக்கூறும் ஒலிம்பிக்கின் சர்வதேசத் தத்துவத்தை இது வெளிப்படுத்துகிறது. 1920 ஆண்ட்வெர்ப் ஒலிம்பிக் போட்டிகளில் தான் ஒலிம்பிக் கொடி முதன்முதலில் பறக்க விடப்பட்டது.
ஒலிம்பிக் சின்னங்களில் ஒன்றாக ஒலிம்பிக் சுடர் கருதப்படுகிறது. இதற்கான தீப ஓட்டம் 1936 பெர்லின் ஒலிம்பிக் போட்டிகளின்போது தொடங்கியது. ஒலிம்பிக் தீபம், பண்டைய ஒலிம்பியாவில் புறப்பட்டு உலகம் முழுவதும் வலம்வந்து கடைசியாகப் போட்டி நடைபெறும் நாட்டை அடைகிறது. ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்கத்தை அறிவிக்கும் முதல் அம்சம், ஒலிம்பிக் தீப ஓட்டம். இந்தத் தீபம் ஏற்றப்பட்டது முதல் போட்டிகள்
போட்டியை நடத்தும் நாட்டின் பண்பாட்டைப் பிரதிபலிக்கும் வகையிலும் விளையாட்டின் சாராம்சத்தைப் பிரபலப்படுத்தும் வகையிலும் நல்லெண்ணச் சின்னம் உருவாக்கப்படுகின்றன.
ரியோ ஒலிம்பிக்கின் நல்லெண்ணச் சின்னமாக ‘விம்சியஸ்’ அறிவிக்கப் பட்டுள்ளது. இது பிரேசில் நாட்டில் வாழும் விலங்கினங்களின் கலவையாக உருவாக்கப்பட்டுள்ளது.
இதற்காக பிரேசில் சுமார் 76 ஆயிரம் கோடி ரூபாய் செலவழித்து உள்ளது.