புதுச்சேரியில் இன்று முழு ஊரடங்கு… சாலைகள் வெறிச்சோடின…

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் இன்று தளர்வில்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் சாலைகள் வாகனம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் நோக்கத்தில், கடந்த வாரத்திலி ருந்து, செவ்வாய்க்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, வாரத்தின் திங்கள்கிழமை இரவு 8 மணியிலிருந்து புதன்கிழமை காலை 6 மணி வரை முழு ஊரடங்கை புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.
இதையடுத்து, புதுச்சேரியில்  அனைத்து கடைகளும் மூடப்பட்டன. மருந்தகம் மற்றும் பாலகங்கள் மட்டுமே திறந்துள்ளது. ஊரடங்கு சமயத்தில் வௌியில் சுற்றுபவர்களின் பைக்குகளை பறிமுதல் செய்து, அபராதம் விதிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். இதனால் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
மாநில எல்லைகளான கோரிமேடு, மதகடிப்பட்டு, முள்ளோடை, கனகசெட்டிகுளம் மற்றும் திருக்கனுார் பகுதியில் காவல்துறையினர்  தடுப்பு அமைத்து,  தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.