சென்னையில் பத்து ரூபாய்க்கு முழு சாப்பாடு..

--

சென்னையில் பத்து ரூபாய்க்கு முழு சாப்பாடு..

சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள ரிச்சிதெருவில் முகேஷ் குப்சந்தானி என்பவர் புதிதாக ஓட்டல் திறந்துள்ளார்.

இந்த ஓட்டலில் என்ன விஷேசம்?

அரிசி சோறு, ரசம், சாம்பார், மோர் மற்றும் காய்கறிகளுடன் 10 ரூபாய்க்குச் சாப்பாடு கிடைக்கிறது.

இவருக்கு முன் மாதிரியாக இருந்தவர், மதுரை ராமு தாத்தா.

 அந்த தாத்தா, மதுரை அண்ணா பேருந்து நிலையத்தில் 10 ரூபாய்க்கு அனைவருக்கும் சாப்பாடு வழங்கினார்.

ராமு தாத்தா இறந்த பிறகு, இது குறித்த செய்தியைப் படித்துள்ளார், முகேஷ்.

‘’ஏழ்மை குடும்பத்தில் பிறந்த  ராமு தாத்தா, 10 ரூபாய்க்குச்  சாப்பாடு போட்ட போது நாமும் ஏன் பத்து ரூபாய்க்குச் சாப்பாடு போடக்கூடாது என்ற எண்ணம் தோன்றியது. அந்த செய்தியைப் படித்த 30வது நாளில் இந்த ஓட்டலை ஆரம்பித்து விட்டேன்’’ என்கிறார், முகேஷ்.

ஓட்டல் திறந்த புதிதில் 100 பேர் வாடிக்கையாளர்களாக இருந்தனர்.

இப்போது தினமும் 300 பேருக்கு பத்து ரூபாய் சாப்பாடு போடுகிறார், முகேஷ்.

-பா.பாரதி.