திருவாரூர்:

காவிரி விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு இன்று தமிழகத்தில் எதிர்க்கட்சியினர் முழு அடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக தமிழகத்தில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்தியஅரசுக்கு எதிராக இன்று திமுக உள்பட எதிர்க்கட்சியினர் முழு அடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ஒரு சில இடங்களில் எதிர்ப்பை மீறி இயக்கப்பட்ட அரசு பஸ்களையும்,  ரயில்களையும் மறித்து திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் உள்பட எதிர்க்கட்சியினர், விவசாய அமைப்புகள் மறியல் செய்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் திருவாரூரிலும்  சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. அப்போரு திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் மத்திய மாநில அரசை எதிர்த்து பேரணி சென்றனர். அப்போது, திமுக தொண்டர் மோகன் என்பவர் தீக்குளிக்க முயற்சி  செய்தார்.

திருவாரூர் மேம்பாலத்தில் காவிரி வாரியம் அமைக்கக்கோரி திமுக தொண்டர் மோகன் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். அவரை  தீக்குளிக்க முயன்ற மோகனை உடன் இருந்த தொண்டர்கள் மற்றும் போலீசார்தடுத்து நிறுத்தினர். இதன் காரணமாக பரபரப்பு ஏற்பட்டது.

அதுபோல, ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு திமுக கூட்டணி கட்சியினர் போராட்டம் நடத்தினர். அப்போது, முயன்ற திமுக தொண்டர் ஆறுமுகம் தீக்குளிக்க  முயன்றார். இதைப்பார்த்த போலீசார் அதை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.