முழு அடைப்பில் பங்கேற்காத ஓட்டல் சங்க தலைவர் கடை மீது கல்வீச்சு

வேலூர்:

மிழ்நாடு ஓட்டல்கள் சங்கத் தலைவர் வெங்கடசுப்புவின் பேக்கரி கல்வீசி தாக்கப்பட்டது.

காவிரியில் தமிழகத்தின் பங்கை தர மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்தும், தமிழர்களுக்கு எதிராக கர்நாடகாவில் நடந்த வன்முறை சம்பவங்களுக்கு கண்டனம் தெரிவித்தும் இன்று தமிழகத்தில் முழு அடைப்பு போராட்டம் நடந்தது.

இந்த போராட்டத்தில் எதிர்க்கட்சிகளும் பல்வேறு அமைப்புகளும் கலந்துகொண்டன. வணிகர் சங்கங்களும் ஆதரவு தெரிவித்தன. இந்த நிலையில்,  தமிழ்நாடு ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம் கலந்து கொள்ளாது என்று அந்த சங்கத்தின் தலைவர் வெங்கடசுப்பு அறிவித்தார்.

a

இந்நிலையில், காட்பாடி பகுதியில் உள்ள வெங்கடசுப்புவுக்கு சொந்தமான டார்லிங் பேக்கரி மீது இன்று கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டன. இன்றைய பந்தில் தமிழ்நாடு ஓட்டல்கள் சங்கம் பங்கேற்காது என இவர் அறிவித்திருந்ததாலேயே இவரது கடை தாக்குதலுக்கு உள்ளானதாக சொல்லப்படுகிறது.

கார்ட்டூன் கேலரி