கத்தார் : முழு ஏ சி வசதியுடன் உலகக் கோப்பை விளையாட்டு அரங்கம் திறப்பு

த்தார், தோகா

த்தார் நகரில் உலகக்கோப்பை கால்பந்து போட்டியை முன்னிட்டு அமைக்கப்பட்ட விளையாட்டு அரங்கம் திறக்கப்பட்டது.

தோகா மீது அதன் அண்டை நாடுகளான சவுதி அரேபியா,  ஐக்கிய அரபு அமீரகம், பகரைன், மற்றும் எகிப்தி ஆகிய நாடுகள் கடந்த 2017 முதல் வர்த்தக மற்றும் அரசியல் தடை விதித்துள்ளன.  தோகா தீவிரவாதத்துக்கு ஆதரவு அளிப்பதாக கூறி இந்த தடை விதிக்கப்பட்டது.   இதற்கு தோகா தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது.

நடைபெற உள்ள ஃபிஃபா உலகக் கோப்பை போட்டி தலைவர் ஜியானி இந்த நாடுகளுக்கிடையே சமாதானத்தை ஏற்படுத்த முயன்றுள்ளார்.    இம்முறை போட்டியில் பங்கு பெறும் நாடுகளை 32 லிருந்து 48 ஆக உயர்த்த தீர்மானம் செய்யப்பட்டுள்ளது.   எனவே இந்த போட்டிகளை அரபு நாடுகள் அனைத்திலும் நடத்த வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.

இந்த போட்டிகளுக்காக தோகா அரசு கத்தாரில் ஒரு விளையாட்டரங்கத்தை அமைத்துள்ளது.   இந்த அரங்கம் முழுவதுமாக குளிரூட்டப்பட்டுள்ளது.    இது மரத்தாலான படகு போன்ற அமைப்பில்  கட்டப்பட்டுள்ளது.  சமீபத்தில் நடைபெற்று வரும் எமிர் கோப்பை இறுதிப் போட்டி இந்த அரங்கில் நடைபெற்றுள்ளது.  அல்ஜனௌப் என பெயரிடப்பட்ட இந்த அரங்கில் சுமார் 40000 பேர் அமர வசதிகள் செய்யப்பட்டுள்ளன

தோகாவில் பூரண மது விலக்கு அமுலில் உள்ளது.  அத்துடன் இங்கு வீரர்கள் தங்க போதுமான வசதிகள் கிடையாது என பல நாடுகளும் தெரிவித்துள்ளனர்.  அயினும் இந்த போட்டியை நடத்தும் நாடுகளில் ஒன்றாக தோகா கடும் முயற்சி செய்து வருகிறது.   இந்த போட்டிகளுக்காக சுமார் 6 முதல் 8 பில்லியன் டாலர்கள் வரை தோகா செலவு செய்ய உள்ளது.

கார்ட்டூன் கேலரி