மகனுடன் ஜாலியாக ஐபிஎல் பைனலை ரசித்தார் மல்லையா!

லண்டன்:

ந்திய வங்கிகளுக்கு 9 ஆயிரம் கோடி கடன் பாக்கி வைத்து லண்டனுககு தப்பி ஓடிய விஜய் மல்லையா, அங்கு தனது மகன் சித்தார்த் மல்லையாவுடன் சேர்ந்து ஜாலியாக ஐபிஎல் கிரிக்கெட் பைனல் போட்டியை பார்த்து ரசித்தார். அதோடு அதை வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளார்.

வங்கிக் கடன் பாக்கி மற்றும் கிங்பிஷர் நிறுவன ஊழியர்களுக்கு சம்பள பாக்கி என பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்ட விஜய் மல்லையா திடீரென லண்டன் தப்பியோடினார்.  அவரை இந்தியாவுக்கு அழைத்துவர ராஜாங்க ரீதியிலான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.  அதேநேரம், இந்தியாவின் கோரிக்கையை ஏற்று மல்லையாவை நாடு கடத்த முடியாது என்றும், அதற்கு தங்கள் சட்டம் இடம்தரவில்லை என்றும் இங்கிலாந்து அரசு தெரிவித்துவிட்டது.

jjyuj-300x178

இதற்கிடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை பெங்களூரில் நடைபெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் இடையேயான  ஐபிஎல் இறுதி போட்டியை மல்லையா தனது மகன் சித்தார்த்துடன் சேர்நது டிவியில் பார்த்து ரசித்துள்ளார்.

இந்த வீடியோவை சித்தார்த் சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியும் இருக்கிறார் விஜய் மல்லையா.

அந்த வீடியோவில் “லண்டனில் நானும், எனது தந்தையும் ஐபிஎல் பைனல் போட்டியை பார்க்கிறோம்..” என்று சித்தார்த் வர்ணனை செய்ய, மல்லையா, “கோ ஆர்சிபி..” என உற்சாகமூட்டுகிறார்.

அப்பாவும் மகனும் இப்படி  ஜாலியாக இருப்பதை வீடியோவில் பார்த்த, கிங்பிஷர் ஊழியர்கள் கொதித்துப்போயுள்ளனர்.

“மல்லையாவை எப்படியாவது இந்தியாவுக்கு இழுத்துவர வேண்டியது மத்திய அரசின் கடமை. மோசடிக்காரரை போல இன்றி, மல்லையா தனது வாழ்க்கையை மகிழ்ச்சியாக கொண்டாடிக்கொண்டிருப்பது தேசத்துக்கே அவமானம்” என்று அவர்கள் கூறுகிறார்கள்.