மேடை மெல்லிசை மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தலைமை சங்கம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்ப தாவது:
கோவிட் 19 (கொரோனா வைரஸ் )தொற்று காரணமாக ஊரடங்கு உள்ள இந்த நேரத்தில் நமது இசைக் கலைஞர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது.

இசையை மட்டுமே நம்பி வாழ்ந்து கொண்டிருக்கும் நமது இசைக்கலைஞர்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் வாழ்வில் ஒளி ஏற்றும் விதமாக சங்கர் சாதகப் பறவைகள் நிதி திரட்டும் நிகழ்ச்சியாக Face book, You tube சேனல் வழியாக ” Music Relay ” எனும் இசை விருந்து வழங்க இருக்கிறார்கள். இந்த இசை நிகழ்ச்சியானது 27- 06-2020 மாலை 5:30 மணி (IST) முதல். சனிக்கிழமை யன்று நடைபெற உள்ளது.
“இசையால் வசமாகா இதயம் எது” என்பதுபோல முதன்முறையாக, உங்களைத்தேடி உங்கள்” இதயத்தை மேடையாக்கி, சாதகப்பறவைகள் 50 க்கும் மேற்பட்ட முன்னணி/பின்னணி பாடகர்கள் மற்றும் இசைக்கலைஞர்கள் ( சாதனை பறவைகளோடு)பங்குபெறும் மாபெரும் நிகழ்வுதான் – “தொடர்இசை(Music Relay)”
பின்வரும் இணைப்புகளுடன் பொதுமக்கள் எங்கள் நிகழ்வை ரசிக்க முடியும்: https://www.youtube.com/c/musictubes
https://www.facebook.com/musictubeSSP/