பாரபட்சமின்றி தமிழகத்திற்கு நிதி ஒதுக்கப்படும்: 15வது நிதிக்குழு தலைவர் என்.கே.சிங்
சென்னை:
மத்திய அரசின் நிதிநிலைக்கு ஏற்ப பாரபட்சமின்றி தமிழகத்திற்கு நிதி ஒதுக்கப்படும் என்று 15வது நிதிக்குழு தலைவர் என்.கே.சிங் கூறினார்.
என்.கே.சிங் தலைமையிலான 15வது நிதிக்குழுவினர் கடந்த 2 நாட்களாக தமிழகத்தில் ஆலோசனை நடத்தி வருகின்றனர். நேற்று அரசு மற்றும் அரசியல்கட்சிகளின் கருத்துகளை கேட்டறிந்தது. மேலும், உள்ளாட்சி சிறப்பு அலுவலர்கள், தொழில் முனைவோர்கள் கருத்துக்களையும் கேட்டறிந்தனர்.
இன்று 2வது நாளாக ‘ சென்னை தலைமை செயலகத்தில் தமிழக முதல்வர், துணை முதல்வருடன் மற்றும் உயர் அதிகாரிகளுடன் 15-வது நிதிக்குழு உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், தமிழக அரசின் சார்பில் பல்வேறு திட்டப்பணிக்களுக்காக நிதி ஒதுக்க கோரிக்கை வைக்கப்பட்டது.
கூட்டம் முடிந்ததும் செய்தியாளர்களை சந்தித்த நிதிக்குழு தலைவர் என்.கே.சிங், மக்கள் நல திட்டங்களுக்கு நிதியை குறைக்க கூடாது என்று தமிழக அரசு வற்புறுத்தி உள்ளது/ மத்திய அரசின் நிதிநிலைக்கு ஏற்ப தமிழகத்திற்கு பாரபட்சமின்றி நிதி ஒதுக்கப்படும் என்றும் கூறி உள்ளார்.