ராஜஸ்தான் : மோடியின் நற்பணி பேரணியில் நடைபெற்ற வினோதங்கள்

ஜெய்ப்பூர்

ராஜஸ்தான் மாநிலத்தில் பிரதமர் மோடி நற்பணி திட்டங்கள் தொடங்கிய பேரணியில் பல வினோத சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

ராஜஸ்தானில் மாநில அரசு சார்பில் பல நற்பணிகள் தொடக்க விழா நடைபெற்றது.   இந்த விழாவில் பிரதமர் மோடியுடன் கலந்துரையாட திட்டத்தின் பயனாளிகளாக சுமார் 2.5 லட்சம் பேர் கலந்துக் கொண்டுள்ளனர்.    அத்துடன் அதற்கான அழைப்புக் கடிதத்தத்தை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் அளித்துள்ளனர்.

ஆயினும் அதிகம்  கூட்டம்  வராது என அதிகாரிகளுக்கு சந்தேகம் வந்துள்ளது.   அதனால் கிராமப்புற கட்டாய வேலைவாய்ய்பு அளிக்கப்படும் பயனாளிகள் அழைத்து வரப்பட்டுள்ளனர்.  மேலும் இந்த பேரணியில் கலந்துக் கொள்ளாதவர்களுக்கு இனி ஊதியமும் பணியும் வழங்கப் பட மாட்டாது என மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் அழைப்புக்கடிதம் அளிக்கப் பட்ட அனைவரும் அவசியம் கலந்துக் கொள்ள வேண்டும் என வற்புறுத்தப் பட்டுள்ளனர்.   அதே நேரத்தில் விழாவில் கலந்துக் கொண்ட சிலருக்கு நலத்திட்ட உதவிகள் எதுவும் வழங்கப்படாத நிலையும் இருந்துள்ளது.    கடந்த வருடத்தில் இருந்து தொடங்கப் பட்ட நலத்திட்ட பயனாளிகளும் தற்போது இந்த விழாவுக்கு அவசியம் வர வேண்டும் என வற்புறுத்தப் பட்டுள்ளனர்.

அத்துடன் பயனாளிகளில் பலர் ஒரே மாதிரியான உடைகள் அணிவிக்கப்பட்டு உட்கார வைக்கப்பட்டுள்ளனர்.  அவர்கள் அனைவரும் மோடி போல் ஒருவர் வந்ததும் ஒரே நேரத்தில் எழுந்து ’மோடிஜி வாழ்க’ என குரல் எழுப்பி உள்ளனர்.   அப்போது அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டு பலர் கிழே விழுந்துள்ளனர்.     அதன் பிறகு தான் அவர்களுக்கு வந்தது மோடி அல்ல என்பதே தெரிந்துள்ளது.

மேடையில் ஏறி மோடியின் கையினால் நலத்திட்டம் பெற்ற ஒரு சில பயனாளிகள் மோடியிடம் பேச முயன்றுள்ளனர்.  அப்போது முதல்வர் வசுந்தரா ராஜே, அவர்களைப் பேச விடவில்லை.  “தாங்கள் பிரதமருக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறீர்களா? நல்லது” எனக் கூறி அவர்களை அங்கிருந்து அனுப்பி உள்ளார்.

இந்த விழாவில் கறுப்பு உடை அணிந்து வந்த யாரும் அனுமதிக்கப் படவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.   அத்துடன் நலத்திட்டங்களுக்கான உத்தரவு வழங்கிய பைகளுடன் ஒரு சில காணப்பட்டுள்ளனர்.   அவர்களில் சிலருக்கு மகளிர் உதவித் திட்டங்களுக்கான பைகள் அணிக்கப்பட்டு புகைப்படம் எடுக்கப்பட்டிருந்தது.