மும்பையில் கடல் சீற்றம்….ராட்சத அலைகள் கரையை தாக்கின

மும்பை:

மும்பையில் சில தினகங்களாக கன மழை பெய்து வருகிறது. இந்த வகையில் இன்று மும்பையில் கடல் சீற்றம் அதிகமாக இருந்தது. மதியம் 1 மணிக்கு 4.96 மீட்டர் உயரத்திற்கு அலைகள் எழுந்து கரையை ஆவேசமாக தாக்கின. ஒரு சில இடங்களில் கன மழையும் பெய்தது.

கடல் சீற்றம் காரணமாக கரையோர பகுதிகளில் கடல் நீர் புகுந்து வெள்ளமாக ஓடியது. ராட்சத அலைகள் கடலில் இருந்த குப்பைகளை அள்ளி வீசுவதால் அனைத்து கடற்கரைகளிலும் குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கிறது.

நேற்று ஒரே நாளில் மட்டும் ராட்சத அலைகள் 361 டன் குப்பைகள் கடலில் இருந்து அள்ளி வீசியது. மும்பையில் கடல் சீற்றமும், கடும் மழையும் தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.