அமராவதி:

ந்திர மாநில சட்டமன்றத்துக்கு உரிய பர்னிச்சர்கள் காணாமல் போன நிலையில், அது தெலுங்குதேசம் கட்சியைச் சேர்ந்த முன்னாள் சபாநாயகரின் கடையிலும், அலுவலகத்திலும் இருந்தது தெரிய வந்தது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த தெலுங்குதேசம் ஆட்சியின்போது ஆந்திர மாநில சட்டமன்ற சபாநாயகராக கோடேலா சிவபிரசாத் ராவ் இருந்தார். அப்போது ஆந்திர சட்டமன்றத்துக்கு தேவையான பர்னிச்சர்கள் ஐதராபாத்தில் இருந்து கொண்டு வரப்பபட்டது. இதில் பல பொருட்கள் காணாமல் போன நிலையில், அவைகள் அனைத்தும் சபாநாயகர் அலுவலகம் மற்றும் அவரது மகனின் கடையில் பதுக்கி வைக்கப்பட்டது தெரிய வந்தது.

இந்த பொருட்களை சபாநாயகர், சட்டமன்றத்துக்கு எடுத்து வராமல், அங்கீகரிக்கப்படாத இடங்களுக்கு திருப்பி அனுப்பி விட்டதாகவும், தனது  குண்டூர் அலுவலகத்துக்கும், தனது மகனின் ஷோரூமுக்கும் அனுப்பி வைத்துள்ளதாகவும் புகார் எழுந்தது.

இதுதொடர்பாக விசாரணை நடத்தி வந்த சட்டமன்ற செயலக அதிகாரிகள் மற்றும் காவல்துறை யினர்,  சில  பர்னிச்சர்கள் கோடேலா சிவா பிரசாத் ராவ் குண்டூர் மாவட்டத்தில் உள்ள அவரது தனிப்பட்ட அலுவலகத்தில் இருந்து  மீட்டனர்.

அதைத்தொடர்ந்து, அவரது மகனின் கடையில் சோதனையிட்ட காவல்துறையினர், அங்கு குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல் தளவாட பொருட்கள் இருந்ததை கண்டனர்.  அதையடுத்து, அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த பர்னிச்சர் உள்பட தளவாட பொருட்களும் மீட்கப்பட்டன.

இது தொடர்பான புகாரின் பேரில்,  முன்னாள் சபாநாயகர்  கோடேலா சிவா பிரசாத் ராவ் மற்றும் அவரது மகன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதற்கிடையில், கடந்த 2016 ம் ஆண்டில் ஐதராபாத்தில் இருந்து அமராவதிக்கு சட்டசபை தளபாடங்கள் மற்றும் உபகரணங்களை மாற்றும்போது, ​​அதில் சிலவற்றை சாட்டேனபள்ளியில் உள்ள அவரது அலுவலக-இல்லத்திற்கு எடுத்துச் சென்றதாக ராவ் சமீபத்தில் ஒப்புக்கொண்டார்.

தற்காலிக சட்டசபை கட்டிடத்தில் தளவாடங்கள் கெட்டுப் போயிருக்க வாய்ப்பு உள்ளதால், பாதுகாப்பு மற்றும் பராமரிப்புக்காக தனது அலுவலகத்தில் வைத்திருந்தாகவும் தெரிவித்தார். மேலும், தளபாடங்களுக்கு உரிய  பணம் செலுத்தவும் முன்வந்தார்.

அவரது கருத்தை மாநில அரசு ஏற்காத நிலையில்,  முன்னாள் சபாநாயகரான கொடேலா ராவ் தனது அலுவலகத்தில் இருந்து தளபாடங்கள் எடுத்துச் செல்லுமாறு மாநில அரசிடம் அறிவுறுத்தல் கோரி உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.

அதில்,  தன்னிடம் உள்ள தளபாடங்களை எடுத்துச் செல்லுமாறு கடந்த ஜூன் மாதமே சட்டமன்ற அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியதாகவும், ஆனால், தனது கடிதம் மீது  எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் குற்றம் சாட்டி உள்ளார்.

இது தொடர்பான வழக்கு ஆந்திர உயர்நீதி மன்றத்தில் நடைபெற்று வருகிறது. மேலும்,