பெங்களூரு:

ர்நாடக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிலவரம் நேற்று வெளியான நிலையில், அங்கு எந்தவொரு கட்சிக்கும் தனி மெஜாரிட்டி கிடைக்காமல்  தொங்கு சட்டமன்றம்  உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் ஆட்சியை கைப்பற்றி 104 இடங்களை பெற்றுள்ள பாரதியஜனதா முயற்சி மேற்கொண்டு வருகிறது. அதேவேளை யில் காங்கிரஸ் கட்சியின் 78 உறுப்பினர்களின் ஆதரவுடன் மதசார்பற்ற ஜனதாதளம் ஆட்சியை பிடிக்க முயற்சித்து வருகிறது.

இந்நிலையில், இன்று பாதியஜனதா, காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதளம் கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் கட்சியின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்து வருகின்றனர்.

இந்நிலையில், இன்று நடைபெற்ற   காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில்,  78 பேரில் 66 பேர் மட்டுமே கலந்துகொண்டுள்ளதாக கூறப்படுகிறது. 12 பேரை காணவில்லை என்று கூறப்படுகிறது. அதற்கான காரணங்கள் எதுவும் தெரிவிக்கப்பட வில்லை.

அதுபோல குமாரசாமியின்  மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டிய ஆலோசனைக் கூட்டத்திலும், சட்டமன்ற உறுப்பினர்களான  ராஜ வெங்கடப்பா நாயக்கா மற்றும்வெங்கடராவ் நாதகவுடா ஆகிய 2 பேர் பங்கேற்கவில்லை என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதன் காரணமாக பரபரப்பு நிலவி வருகிறது. ஏற்கனவே பாரதியஜனதா கட்சியினர் மாற்று கட்சி உறுப்பினர்களை தங்கள் வசம் இழுக்கும் முயற்சியில் குதிரை பேரம் நடத்தி வருவதாக கூறப்பட்ட நிலையில், தற்போது காங்கிரஸ், ஜேடிஎஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சி எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பங்கு பெறாதது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.