வருங்கால முதல்வர் விஜய்: எஸ்.வி. சேகர் வாழ்த்து

டிகர் விஜய்யின் பிறந்தநாளான இன்று, “வருங்கால முதல்வர் விஜய்க்கு வாழ்த்துகள்” என்று வாழ்த்து தெரிவித்துள்ளார் நடிகர் எஸ்.வி. சேகர்.

இது குறித்து அவர் தெரிவித்ததாவது:

“இளைய தளபதி விஜய், ஹார்ட் ஒர்க்கர். அதாவது ஹார்ட் ஒர்க்கிங் அப்படின்னா ஸ்டேஜ் பை ஸ்டேஜ் முன்னுக்கு வந்த ஒரு நடிகன் என்றால் அது விஜய். அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.. என்னைவிட இளையவர் என்பதால் ஆசீர்வாதங்களையும் தெரிவி்த்துக்கொள்கிறேன்.

விஜய் அரசியலுக்கு வரணும், வரணும் என்று அவரது ரசிகர்கள் கேட்டுக்கிட்டிருக்காங்க. எல்லாரும் கிளம்பி வாங்க. ஆனா அரசியலுக்கு சினிமா நடிகன் வரக்கூடாதுன்னு சொல்ற தெல்லாம் பயத்துல சொல்லற வார்த்தை.

நல்லவங்க வரணும்.. ஸ்டிரைட் ஃபாரவர்டா இருக்கிறவங்க வரணும். மக்களுடைய கஷ்டங்க ளைப் புரிந்து அதைப்போக்க என்ன செய்யணும் என்று தெரிஞ்சவங்க வந்தா போதும்.

எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரமா இருக்க வேண்டியதில்லை. எல்லாம் தெரிந்தவர்களை நாம் வைத்துக்கொண்டு யார் வேண்டுமானாலும் நிர்வாகம் செய்ய முடியும். அதற்காகத்தான் சொல்கிறேன்.

விஜய்யும் அரசியலுக்கு வரக்கூடிய சூழல் இருக்கிறது. அது எப்போது என்பதை விஜய்தான் முடிவு செய்ய வேண்டும். ஸோ… எந்த நல்லவர்கள் வந்தாலும் என்னோட ஆதரவு அவங்களுக்கு உண்டு. அதே நேரம் யாரு கட்சி ஆரம்பித்தாலும் அங்கே வந்து நிற்பேன் என்று பயப்பட வேண்டாம்.

என்னைப் பொறுத்தவரை நாடு நல்லா இருக்கணும். நல்லவங்க பொறுப்புல இருக்கணும். அப்படி இருந்தா ஜனங்களுக்கு கஷ்டம் இல்லாம இருக்கும்.

ஸோ.. வருங்கால முதல்வர் விஜய்க்கு இப்போதே என் வாழ்த்துகளைத்தெரிவித்துக்கொள்கிறேன்”

இவ்வாறு எஸ்.வி. சேகர் தெரிவித்துள்ளார்.