சென்னை ரிப்பன் மாளிகையில் நடைபெற்ற 74வது சுதந்திர தின விழா!

சென்னை:  சென்னை மாநகராட்சி தலைமையகமான ரிப்பன்மாளிகையில் நாட்டின் 74வது சுதந்திர தினத்தையொட்டி தேசிய கொடி ஏற்றப்பட்டது. பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் கோ. பிரகாஷ் இஆப., அவர்கள் தேசிய கொடியேற்றி வாழ்த்துக்களை தெரிவித்தார். தொடர்ந்து, சிறந்த பணி அலுவலர்கள், தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார்

கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான களப்பணியில் சீரிய முறையில் சிறந்த பணிபுரிந்தமைக்காக மாநகராட்சி அலுவலர்கள், ஊழியர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர் கள் அனைவருக்கும் பாராட்டி  ஆணையாளர் பிரகாஷ் சான்றிதழ்களை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் இணை ஆணையாளர் (சுகாதாரம்) பி.மதுசுதன் ரெட்டி, இணை ஆணையாளர் (கல்வி) சங்கர்லால் குமாவத், துணை ஆணையாளர் (பணிகள்) பி.குமாரவேல் பாண்டியன், துணை ஆணையாளர் (வருவாய்) ஜெ.மேகநாத ரெட்டி, வட்டார துணை ஆணையாளர்கள் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஷ், பி.என்.ஸ்ரீதர், பி.ஆகாஷ், தலைமைப் பொறியாளர்கள், மேற்பார்வை பொறியாளர்கள், சென்னை மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கார்ட்டூன் கேலரி