ஜி சாட் 11 மறு ஆய்வு முடிந்தது : விரைவில் ஏவ இஸ்ரோ முடிவு

 

பெங்களூரு

ஜிசாட் 11 செயற்கைக் கோள் மறு ஆய்வு முடிந்த படியால் விண்ணில் ஏவ இஸ்ரோ முடிவு செய்துள்ளது.

இந்திய விண்வெளி ஆய்வு மையம் என அழைக்கப்படும் இஸ்ரோ பல செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தி உள்ளது.  குறைந்த எடை உடைய செயற்கைக் கோள்களை இந்தியாவில் இருந்து இஸ்ரோ ஏவுகிறது.     அதிக எடை கொண்ட செயற்கைக் கோள்கல்ளை மட்டும் தென் அமெரிக்காவில் உள்ள பிரஞ்சு கயானாவில் இருந்து இஸ்ரோ ஏவி வருகிறது.

அவ்வகையில்  ஜி சாட் 11 செயற்கைக் கோள் பிரஞ்சு கயானாவுக்கு அனுப்பப் பட்டு,  சென்ற மாதம் 26 ஆம் தேதி விண்ணில் செலுத்த தயாராக இருந்தது.  அப்போது இந்தியாவில் ஸ்ரீஹரி கோட்டாவில் இருந்து ஏவபட்ட ஜி சாட் 6 செயற்கைக் கோள் தோல்வி அடைந்தது.    அதனால் கலக்கமடைந்த விஞ்ஞானிகள் ஜி சாட் 11 செயற்கைக் கோளை மறு ஆய்வு செய்ய  முடிவு எடுத்தனர்.

அதை ஒட்டி ஜி சாட் 11 செயற்கைக் கோள் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டு அதை இந்திய விஞ்ஞானிகள் மறு ஆய்வு செய்தனர்.   தற்போது மறு ஆய்வு முடிந்து விட்டதாகவும் ஜி சாட் 11 செயற்கைக் கோள் விண்ணில் செலுத்த்தபட தயாரான நிலையில் உள்ளதாகவும் இஸ்ரோ அறிவித்துள்ளது.  அதன் படி விரைவில் ஜி சாட் 11 விரைவில் விண்ணில் செலுத்தப்படும் என தெரிய வந்துள்ளது.