டெல்லி:

ரும் 15ந்தேதி ஜி20 நாடுகளின் நிதியமைச்சர்கள். , மத்திய வங்கிகளின் ஆலோசனைக் கூட்டம் கூட்டம் காணொளி காட்சி மூலம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஜி20 நாடுகளின் 14-வது மாநாடு, கடந்த ஆண்டு ஜப்பானின் ஒசாகா நகரில்  நடைபெற்றது. அதில் பிரதமர் மோடி பங்கேற்றார். அந்த கூட்டத்தில் உலகளாவிய தீவிரவாதம், வானிலை மாற்றம் போன்ற உலகின் மிகப்பெரும் சவால்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

தற்போது கொரோனா வைரஸ் பரவல் காரணமாக உலக பொருளாதாரம் கடுமையாக சரிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில்,  , ஜி20 நாடுகளின் நிதியமைச்சர்கள், மத்திய வங்கிகளின் ஆலோசனைக் கூட்டம் வரும் 15-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

காணொலி முறையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் ஆகியோர் பங்கேற்க இருக்கின்றனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில்,  கொரோனா நோய்த்தொற்று பிரச்னை முடிவுக்கு வந்த பிறகு பொருளாதாரத்தை முன்னெடுத்துச் செல்ல மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே கடந்த 31-ஆம் தேதி இதேபோன்ற ஒரு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.