பவன் கல்யாண் – ஹரிஷ் சங்கர் இணையும் படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பாளராக ஒப்பந்தம்…!

ஹரிஷ் சங்கர் இயக்கத்தில் பவன் கல்யாண், ஸ்ருதிஹாசன் நடித்து 2012-ம் ஆண்டு வெளியான படம் ‘கபார் சிங்’. பெரும் வரவேற்பைப் பெற்ற இந்தப் படத்தின் 8 ஆண்டுகள் நிறைவை நேற்று பவன் கல்யாண் ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தார்கள்.

‘கபார் சிங்’ படக் கூட்டணியான பவன் கல்யாண் – ஹரிஷ் சங்கர் இருவரும் மீண்டும் இணைந்து படம் பண்ணவுள்ளார்கள். இந்தப் படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

இந்தப் படத்துக்கு இசையமைப்பாளராக தேவி ஸ்ரீ பிரசாத் பணிபுரியவுள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது.

You may have missed