பாராளுமன்றம் தொடர் முடக்கம்: தம்பித்துரை, கனிமொழிக்கு நிதின்கட்கரி கடிதம்

டில்லி:

மேகதாது அணை விவகாரம் காரணமாக அதிமுக, திமுக எம்.பி.க்கள் பாராளு மன்ற நடவடிக்கைகளை முடக்கி வரும் நிலையில், பாராளுமன்ற முடக்கத்தை கைவிடுமாறு அதிமுக எம்.பி. தம்பித்துரை, திமுக எம்.பி.கனிமொழிக்கு மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின்கட்கரி கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

மேகதாது அணைக்கு அனுமதி அளித்த விவகாரம், ரஃபேல் போர் விமான ஒப்பந் தம் விவகாரம் தொடர்பாக பாராளுமன்றம்  முடக்கப்பட்டு வருகிறது.

கடந்த 11ம் தேதி  தொடங்கிய பாராளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர்ந்து, தொடங்கிய நாளில் இருந்தே,  எதிர்க்கட்சிகளின் பல்வேறு கோரிக்கை காரண மாக எழுந்துள்ள அமளி காரணமாக கடந்த 8 நாட்களாக அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

பாராளுமன்ற வளாகத்திலும் தொடர்ந்து கோரிக்கைகள் எழுதப்பட்ட பதாகை களை ஏந்தி அதிமுக எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் மத்திய போக்குவரத்து துறை அமைச்சர், அதிமுக எம்.பியும், துணை சபாநாயகருமான தம்பித்துரை மற்றும் திமுக எம்.பி. கனிமொழி ஆகியோருக்கு கடிதம் எழுதி உள்ளார்.

அந்த கடிதத்தில், மேகது பிரச்சினை தொடர்பாக பாராளுமன்றம் முடக்கப்படு வதை கைவிடுங்கள் என்றும், பாராளுமன்ற வளாகத்தில் நடத்தி வரும் ஆர்ப்பாட்டத்தை திரும்ப பெற்றுக்கொள்ளுங்கள் என்று வலியுறுத்தி உள்ளார்.

மேலும், மேகதாது அணை பிரச்சினை குறித்து விவாதிக்கலாம், டெல்டா விவசாயிகளின் நலன்களை அரசு கருத்தில் கொண்டுள்ளது. தமிழக அரசுஅனுமதி இல்லாமல் மேகதாது அணை கட்ட முடியாது. “மேகதாது தொடர்பாக விரிவான திட்ட அறிக்கைக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது” * “அறிக்கைக்கு காவிரி மேலாண்மை ஆணையம் ஒப்புதல் வழங்கினால் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்” ஆகவே தங்களது ஆர்ப்பாட்டங்களை திரும்ப பெற்றுக்கொள்ளுங்கள் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

கார்ட்டூன் கேலரி