புயல் பாதிப்பு: தனியார் கல்லூரி மாணவர்கள் கல்வி கட்டணத்தை குறைக்க நடவடிக்கை! அமைச்சர் அன்பழகன்

சேலம்:

ஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை சேர்ந்த தனியார் கல்லூரிகளில் மாணவர்கள் கல்வி கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவது தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறி உள்ளார்.

இன்று சேலம் சென்ற தமிழக  உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் சேலம் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் கூறியதாவது, கஜா பாதித்த பகுதிகளில் நிவாரண பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாகவும், பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக ஆங்காங்கே புதிய  போர்வெல்கள் அமைக்கப்பட்டு  குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது என்று கூறினார்.

மேலும்,புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மாணவ மாணவிகளின் நலத்தை கருத்தில்கொண்டு அந்த மாவட்டங்களில் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டு இருப்பதாகவும், புயல் பாதிப்புக்குள்ளான மாவட்டங்களில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களின் கல்வி  கட்டணங்களை குறைப்பது குறித்தும்  தனியார் கல்லூரி நிர்வாகிகளுடன் பேசி நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்