பலவீனமானது ‘கஜா’: தமிழ்நாடு வெதர்மேன் தகவல்

சென்னை:

மிழகத்தில்  கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் என அறிவிக்கப்பட்ட கஜா புயல் தற்போது வலுவிழந்து வருவதாகவும், 15ந்தேதி இரவே கலையை கடக்கும் என்று  தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறி உள்ளார்.

கஜா புயல் நகரும் வேகம் மணிக்கு 4 கிலோ மீட்டராக குறைந்திருப்பதாகவும், அதிகாலை மணிக்கு 5 கிலோ மீட்டர் வேகத்தில் இருநத புயல் தற்போது 4 மணி கிலோ மீட்டராக குறைந்திருப்பதாகவும், 15ந்தேதி பிற்பகலில் கரையை கடக்கும் என்று   இந்திய வானிலை மையம் அறிவித்து உள்ள நிலையில், தமிழ்நாடு வெதர்மேனும் அதை உறுதி படுத்தி உள்ளார்.

வங்கக் கடலில் உருவாகியுள்ள கஜா புயல் தற்போது  வங்க கடலில் சென்னைக்கு கிழக்கே 740 கிலோ மீட்டர் தூரத்திலும், நாகைக்கு கிழக்கு- வடகிழக்கே 840 கிலோ மீட்டர் தூரத்திலும் மையம் கொண்டுள்ளது.

இந்த நிலையில் கஜா புயல் குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது முகநூல் பக்கத்தில் கூறியிருப்பதாவது,

தற்போது உருவாகி உள்ள கஜா புயல்  வலுவிழந்து வருகிறது. இந்த புயல் கடலூருக்கும் வேதாரண் யத்துக்கும் இடையே கரையை கடக்கும்போது, புதுச்சேரி, கடலூர், நாகப்பட்டினம், வேதாரண்யம் போன்ற பகுதிகளில் கனமழை மற்றும் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்து உள்ளார்.

மேலும், புயலானது 15ந்தேதி இரவு கரையை கடக்க வாய்ப்பிருப்பதாகவும், அப்போது மணிக்கு 60 முதல் 70 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என்றும், இதன் காரணமாக 14ந்தேதி காலை முதல் 15ந்தேதி வரை நல்வல மழை இருக்கும் என்று கூறி உள்ளார்.

கஜா புயல் காரணமாக சென்னையில் 14ந்தேதி இரவு முதல் 15ந்தேதி காலை வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும்,  கஜா வங்க கடலில் இருந்து இடம்பெயர்ந்து அரபிக்கடல் பகுதிக்கு சென்றாலும், சூறாவளி காரணமாக தொடர்ந்து 16-17 ம் தேதிகளிலும் மழை பெய்யும் என்று கூறி உள்ளார்.

தொடர்ந்து 19 மற்றும் 20ந்தேதிகளில் மீண்டும் சிறிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்து உள்ளார்.