கஜா புயலால் ஒத்தி வைக்கப்பட்ட வனப் பணியாளர் தேர்வுகள் டிச.6-ல் தொடக்கம்

--

சென்னை:

மிழகத்தில் வனப்பணியாளர்கள் தேர்வுகள் 25ந்தேதி தொடங்குவதாக ஏற்கனவே அறிவிக்கப் பட்ட நிலையில், கஜா புயல் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில், ஒத்தி வைக்கப் பட்ட தேர்வுகள் டிசம்பர் 6ந்தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு வனத்துறையில் காலியாக உள்ள 726 வனக்காப்பாளர், 300 வனவர் மற்றும் 152 ஓட்டுநர்  பணியிடங்களுக்கு  இணைய வழித் தேர்வுகள் நவம்பர் 25-ம் தேதி தொடங்கி 30-ம் தேதி வரை நடைபெறுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டருந்தது.

இந்த நிலையில் கடந்த 15ந்தேதி தமிழகத்தில் பெரும் சேதத்தை ஏற்படுத்தி உள்ள கஜா புயல் காரணமாக நாகப்பட்டி னம், திருவாரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர் மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்கள் கடுமையாக சேதமடைந்தது. அதன் காரணமாக தேர்வுகள் தள்ளி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், தள்ளி வைக்கப்பட்ட  இணையவழித் தேர்வுகள் டிசம்பர் 6 முதல் 9-ம் தேதி வரை நடைபெறும் என்றும், வனக் காப்பாளர் மற்றும் ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப் பாளர் பணியிடங்களுக்கு டிசம்பர் 10 11 ஆகிய தேதிகளில் தேர்வுகள் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

You may have missed