கஜா புயல் பாதிப்பு: இன்று பல்வேறு பகுதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை

ஜா புயல் பாதிப்பைத் தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்து சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

தஞ்சையில் பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு கல்வி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது.  நாகை வருவாய் கோட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட பள்ளிகளுக்கு, அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் சூழ்நிலைக்கு ஏற்ப விடுமுறை அறிவிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கொடைக்கானல் வட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது