ரூ.4 கோடி மதிப்பிலான நிவாரண பொருட்கள்: ஸ்டாலின் கொடியசைத்து அனுப்பி வைத்தார்

திருச்சி:

ஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திமுக சார்பில் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப் பட்டுள்ளன. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நிவாரண பொருட்கள் ஏற்றப்பட்ட வாகனங்களை கொடி அசைத்து அனுப்பி வைத்தார்.

திருச்சி  கலைஞர் அறிவாலயத்தில் சேமிக்கப்பட்டிருந்த நிவாரண பொருட்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்,  கஜா பாதிப்புக்குள்ளான  டெல்டா மாவட்டங்களுக்கு 100க்கும் மேற்பட்ட வாகனங்களில் அனுப்பி வைத்தார்.

கஜா புயல் பாதிப்புகளை  நேரில் சென்று பார்வையிட்டு வந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அரசு விரைவாக நடவடிக்கை எடுத்து நிவாரணங்கள் வழங்க வேண்டும் என்று வலியுறுத்திய நிலையில், . திமுகவினர் தாங்கள் கொடுக்க விரும்பும் நிவாரண பொருட்களை திருச்சியில் உள்ள  கலைஞர் அறிவாலயத்துக்கு அனுப்பி வைக்கவும்,  திமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் புயல் நிவாரணப் பணிகளில் ஈடுபடவும் அவர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

அதைத்தொடர்ந்து ‘கஜா’ புயல் நிவாரண நிதியாக, தமிழக அரசின் பொது நிவாரண நிதியாக  ரூ.1 கோடி வழங்குவதாக  திமுக அறிவித்து, நேற்று முதல்வரிடம் திமுக பொருளாளர் துரைமுருகன் வழங்கினார்.

இந்த நிலையில், திமுக சார்பில் நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டு உள்ளது.