கஜா புயல் பாதிப்பு தேசிய பேரிடர் பாதிப்பாக அறிவிக்கப்படும் : முதல்வர் பழனிசாமி

--

பட்டுக்கோட்டை:

ஜா புயல் பாதிப்பை தேசிய பேரிடர் பாதிப்பாக அறிவிக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

நாகை மாவட்டத்தில் பேரழிவை ஏற்படுத்தி உள்ள கஜா புயல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய தமிழக முதல்வர் எடப்படி பழனிச்சாமி இன்று இன்று  காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து ஹெலிக்காப்டர் மார்கமாக புதுக்கோட்டை சென்றடைந்தார்.

தொடர்ந்து கார் மூலம் புதுக்கோட்டை  துக்கோட்டையின் மச்சுவாடி, மாப்பிளை யார் பகுதியில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அவர் நேரில் ஆய்வு செய்தார்.

அங்கிருந்த அதிகாரிகள் முதல்வருக்கு புயல் சேதம் பற்றி விளக்கம் அளித்தனர். அதைத் தொடர்ந்து புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கினார்.

தொடர்ந்து முதல்வர், துணைமுதல்வர் மற்றும் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், ஜெயக்குமார் மற்றும் அதிகாரிகள் பட்டுக்கோட்டையில் புயலால் பாதித்த பகுதிகளை பார்வையிட்டனர்.

பட்டுக்கோட்டை சூரப்பள்ளத்தில் தென்னந்தோப்பில் கஜா புயல் சேதத்தை ஆய்வு செய்த பின் முதல்வர் கஜா புயலால் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரண நிதி வழங்கினார். மேலும் வீடுகளை இழந்த 5 குடும்பங்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் நிவாரண உதவி வழங்கினார்.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் கஜா புயல் பாதித்த பகுதிகளை தேசிய பேரிடர் பாதித்த பகுதியாக அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.