கஜா புயல் பாதிப்பு: ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு பணம் அனுப்பி நடிகர் விஜய் நிவாரண பணி

சென்னை:

ஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடிகர் விஜய் தனது ரசிகர் மன்றம் மூலம் நிவாரணி பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தி உள்ளார். இதற்காக அவர் தனது ரசிகர் மன்றத்தினரின் வங்கி கணக்கில் பல லட்சம் பணம் டெபாசிட் செய்துள்ளார்.

நடிகர் விஜய் தனது ரசிகர் மன்றத்தினருக்கு வங்கி மூலம் பணம் அனுப்பியதற்கான அத்தாட்சி

கஜா புயல் பாதிப்புக்கு நடிகர் சிவக்குமார், நடிகர் விஜய் சேதுபதி உளபட பல நடிகர், நடிகைகள் நிவாரண உதவி செய்து வருகின்றனர். இந்த நிலையில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்ட  மக்களுக்கு நடிகர் விஜய் தனது ரசிகர்கள் மூலம் உதவிக்கரம் நீட்டியுள்ளார்.

புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு அரசு உள்பட பல தனியர் அமைப்புகளும் நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.  அந்த வகையில்  நடிகர் சிவகுமார் குடும்பம் ரூ.50 லட்சம் நிதி உதவி செய்துள்ளது. அதுபோல   நடிகர் விஜய் சேதுபதி புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் இருக்கும் மக்களுக்கு ரூ.25 லட்சம் மதிப்புள்ள பொருள்களை (சார்ஜிங் டார்ச்லைட், தென்னை – பலா மரக்கன்றுகள்) நிவாரண உதவியாக வழங்கியுள்ளார்.

அதேபோல், நடிகர் சிவகார்த்திகேயன் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.10 லட்சம் நிதியுதவியாகவும், ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருள்களை நிவாரண பொருள்களாகவும் அனுப்பியுள்ளார்.

தற்போது நடிகர் விஜய் புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் இருக்கும் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தி நிவாரண பணிகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளார். இதை விஜய்யின் மக்கள் தொடர்பாளர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

குறைந்த பட்சம் 2 லட்சம் முதல் 10 லட்சம் வரையிலான  பணம் அந்தந்த பகுதி ரசிகர் மன்ற நிர்வாகிகளின் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

You may have missed