கஜா புயல் பாதிப்பு: கவிஞர் வைரமுத்து ரூ.5 லட்சம் நிதி அறிவிப்பு

--

சென்னை:

கஜா புயல் பாதிப்பிற்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு கவிஞர் வைரமுத்து ரூ.5  லட்சம் நிதியுதவி அளிப்பதாக அறிவித்து உள்ளார்.

தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களை புரட்டிப்போட்டுள்ள கஜா புயல் பாதிப்புக்கு பொதுமக்கள் உள்பட  அரசியல் கட்சியினர், பல தனியார் நிறுவனங்கள்,திரையுலகினர் என அனைத்து தரப்பினரும்  நிவாரண நிதிகள் வழங்கி வருகின்றனர்.

கஜா புயல் பாதிப்புக்கு நடிகர் சிவக்குமார் ரூ. 50 லட்சம் நிதி அறிவித்திருந்தார். அதுபோல  நடிகர் விஜய் சேதுபதி, நடிகர் சிவகார்த்திகேயன்  உள்பட பல நடிகர், நடிகைகள் நிவாரண உதவிகள்  செய்து வருகின்றனர். நடிகர்  விஜய் தனது ரசிகர்கள் மூலம்பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம்  நீட்டியுள்ளார்.

இந்த நிலையில் கவிஞர் வைரமுத்து தனது சார்பாக ரூ.5 லட்சம் நிவாரண நிதி தமிழக அரசின் பொது நிவாரண நிதிக்கு வழங்குவதாக அறிவித்து உள்ளார்.