கஜா புயல் பாதிப்பு: தமிழக அரசின் நிவாரணப் பணிகள் குறித்து  அறிக்கை கேட்கிறது உயர் நீதிமன்றம்

ஜா புயல் பாதித்த பகுதிகளில் தமிழக அரசு மேற்கொண்டு வரும் நிவாரணப் பணிகள் குறித்த விரிவான அறிக்கையை நவம்பர் 29-ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.  .

கடந்த நவம்பர் 16-ம் தேதி நாகை வேதாரண்யம் அருகே கஜா புயல் கரையைக் கடந்தது. இதனால் நாகை, தஞ்சை, திருவாரூர், கடலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட 12 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களில் 30 வருடங்களில் இல்லாத அளவுக்கு பேரழிவு ஏற்பட்டது. .

புயலால் இதுவரை 63 பேர் பலியாகியுள்ளதாகவும், லட்சக்கணக்கான தென்னை மரங்கள், ஆயிரக்கணக்கான கால்நடைகள் அழிந்துள்ளதாகவும்,  2.5 லட்சம் மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி முகாம்களில் தஞ்சம் அடைந்திருப்பதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் புயலால் பாதித்த நாகை, தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களை தேசியப் பேரிடர் பாதித்த பகுதிகளாக அறிவிக்கக் கோரி, சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ரஜினிகாந்த் உயர் நீதிமன்றத்தில் கடந்த 20-ம் தேதி மனுத்தாக்கல் செய்தார்.

“தஞ்சை, நாகை, திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் மக்கள் கடந்த ஐந்து நாட்களாக உணவு, குடிநீர், மின்சார வசதி இல்லாமல் இயல்பு வாழ்க்கையை இழந்துள்ளனர்.   பலியான விலங்குகளின் உடல்கள் அப்புறப்படுத்தாததால், தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது.   அரசு நிவாரண நடவடிக்கைகள் மிக மெதுவாக நடக்கின்றன. , மத்திய அரசும் எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை.

புயலால் பலியானவர்கள் குடும்பங்களுக்கு 50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்… உயிரிழந்த கால்நடைகள், சேதமடைந்த பயிர்களுக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். சேதமடைந்த வீடுகளுக்குப் பதில் புது வீடுகள் கட்டித்தர வேண்டும்” என்று தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

புயல் நிவாரணப் பணிகளுக்கு ஆயிரம் கோடி ரூபாய் அரசு ஒதுக்கியுள்ளதாக முதல்வர் அறிவித்துள்ளதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருதாகவும், அந்த நிவாரணப் பணிகளை நீதிமன்றம் கண்காணிக்கும் என்றும் தெரிவித்தனர்.

இந்நிலையில் இந்த மனு, இன்று நீதிபதிகள் சத்யநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வில் விசாரணைக்கு வந்தது.  அரசு பிளீடர் ஜெயப்பிரகாஷ் நாராயணன் ஆஜராகி கஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தமிழக அரசு நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார். அப்போது மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் சங்கரசுப்பு குறுக்கிட்டு அரசு மேற்கொள்ளும் பணிகளின் பலன் மக்களைச் சென்றடையவில்லை என்றார்.

இரு தரப்பு விளக்கத்தையும் கேட்ட நீதிபதிகள், தமிழக அரசு மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கையை நவம்பர் 29-ம் தேதி தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

#Gaja #Storm #Damage #reliefworks #Government #TamilNadu  #chennai #HighCourt #asks #report