தற்கொலை செய்துகொண்ட விவசாயி குடும்பத்துக்கு இயக்குநர்கள் பாரதிராஜா, அமீர், வெற்றிமாறன் உதவி (வீடியோ)

ஜா புயலால் தனது நிலத்தில் விளைச்சல் பாதிக்கப்பட்டதை அடுத்து  தற்கொலை செய்துகொண்ட விவசாயி குடும்பத்துக்கு இயக்குநர்கள் பாரதிராஜா, அமீர், வெற்றிமாறன் ஆகியோர் நிதி உதவி அளித்தனர்.

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு வட்டம் சோழகன் குடிக்காடு திருவோணம் ஒன்றியத்தை சேர்ந்த விவசாயி   சுந்தர்ராஜன்.  இவர், 30 ஆண்டுகளுக்கு முன், தனக்குச் சொந்தமான ஐந்து5 ஏக்கரில் தென்னை மரங்களை நட்டு வளர்த்து வந்தார். கடந்த, 16ம் தேதி வீசிய கஜா புயலினால், சுந்தரராஜின் தென்னந்தோப்பில் இருந்த, 400 தென்னை மரங்கள் அடியோடு சாய்ந்துவிட்டன. மேலும்,  ஒரு ஏக்கரில் நடப்பட்டிருந்த தேக்கு மரங்களும் சேதமானது.

இதனால் வாழ்வாதாரமே பாதிக்கப்பட்ட நிலையில் எதிர்காலம் குறித்து புலம்பியபடியே இருந்தார். இந்நிலையில் சுந்தர்ராஜன் விஷம் குடித்து, தற்கொலை செய்துகொண்டார்.

இன்று அவரது குடும்பத்தினரை திரைப்பட இயக்குநர்கள் பாரதிராஜா, அமீர், வெற்றிமாறன், திருமுருகன் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். மேலும்  ஐம்பதாயிரம் ரூபாய் நிதி உதவியும் வழங்கினர்.

பிறகு செய்தியாளர்களிடம் பேசிய இயக்குநர்கள், “பொருளாதார வசதியுள்ள நல்ல உள்ளங்கள் சுந்தர்ராஜன் குடும்பத்தினருக்கு மேலும் உதவவேண்டும்” என்று  கேட்டுக்கொண்டனர்.

வீடியோ:

 

 

#Gaja #storm #Directors #Bharathiraja #Ameer #Vettimaran #helped # #suicide #victim