‘கஜா’ மிரட்டல்: கடலூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை! ஆட்சியர் அறிவிப்பு

கடலூர்:

ங்க கடவில் உருவாகி உள்ள கஜா  புயல் காரணமாக,  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர் மாவட்டம் முழுவதும் நாளை (15.11.2018) அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் அறிவித்து உள்ளார்.

கலெக்டர் அன்புச்செல்வன் – கடலூர்

வங்கக்கடலில் உருவாகி உள்ள  கஜா புயல் முதலில், கடலூர் – ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையை கடக்கும் என்று கூறப்பட்டது. பின்னர் அது திசை மாறி உள்ளதாக கூறப்பட்டது. தொடர்ந்து காற்றின் வேகம் குறைந்து வருவதாகவும், கூடி வருவதாகவும்  தகவல்கள் வெளியானது.

இந்த நிலையில், கஜா கடலூருக்கும், பாம்பனுக்கும் இடையே நாளை இரவு  கரையை கடக்கும் வானிலை மையம் அறிவித்து உள்ளது. இதன் காரணமாக மணிக்கு 80 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும், கடலில் 10அடிக்கும் உயரமான அலைகள் எழும்பும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.

அதைத்தொடர்ந்து  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு  நாளை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் உத்தரவிட்டுள்ளார்.

புயல் கரை கடக்கும்போது கடலூர், நாகை உள்ளிபட வங்கக் கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்யலாம் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பேரிடர் மீட்புக்குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். கடலூர் மாவட்டம் முழுவதும் சிறப்பு முகாம்களை தயார் நிலையில் வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இரவு, பகலாக கண்காணிப்புப் பணியில் ஈடுபட வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்டோருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடலூரில் புயல் முன்னெச்சரிக்கை ஏற்பாடு குறித்து ஆய்வு செய்த சிறப்பு அதிகாரி ககன்தீப் சிங் பேடி, கஜா புயல் குறித்து பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் குடிசை வீடுகளில் உள்ள மக்கள் பாதுகாப்பு மையங்களுக்கு செல்லவும், செல்போன்களை முன்கூட்டியே சார்ஜ் செய்து வைத்துக்கொள்ள வேண்டும்  அவர் அறிவுறுத்தியுள்ளார்.

கடலூர் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.