கஜா புயல்: தரங்கம்பாடியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மு.க.ஸ்டாலின் உதவி

--

சென்னை:

ஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  பார்வையிட்டு வருகிறார். தஞ்சாவூர் அருகே உள்ள தரங்கம்பாடியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.

நேற்று அதிகாலை கரையை கடந்த கஜா புயல் நாகை மாவட்டத்தில் வரலாறு காணாத சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் பல மாவட்டங்கள்  மிகுந்த பாதிப்புக்குள்ளாகின. மின்கம்பங்கள், மரங்கள், குடிசைகள் பலத்த சேதமடைந்தன.

புயல் காரணமாக பலர் பலியான நிலையில்,  பலர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 82 ஆயிரம் பேர் பாதுகாப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர்.

புயல் பாதித்த பகுதிகளில் அரசு சீரமைப்பு பணிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.  தமிழக அரசின் துரித நடவடிக்கைக்கு எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல், தமிழிசை உள்ளிட்டோர் தங்களது பாராட்டுகளை தெரிவித்தனர்.

இந்நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் புயல் பாதித்த பகுதிகளை வாகனத்தில் சென்று பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி வருகிறார்.

தரங்கம்பாடி, அக்கறைப்பேட்டை, வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி,  தரங்கம்பாடி, புன்னைவாசல், காரைக்கால் மற்றும் வேதாரண்யத்தில் ஆகிய பகுதிகளில்  பார்வையிட்டு வருகிறார்.

அப்போது, கடுமையான சேதத்தை சந்தித்துள்ள தரங்கம்பாடியில் கஜா புயல் பாதிப்புகளை பார்வை யிட்டு, நிவாரண பொருட்களை வழங்கினார். தொடர்ந்து பார்வையிட்டு வருகிறார்.