தமிழகத்தை தொடர்ந்து கேரளாவை சூறையாடும் ‘கஜா’: இடுக்கி மாவட்டம் கடும் பாதிப்பு

இடுக்கி:

மிழகத்தை சூறையாடிச் சென்ற கஜா புயல், தற்போது கேரள மாநிலத்தில் தனது கோர முகத்தை காட்டி வருகிறது. கேரளாவில் இடுக்கி மாவட்டம் கஜா புயலுக்கு கடுமையான பாதிப்பை சந்தித்து உள்ளது.

நேற்று அதிகாலை வேதாரண்யம் -நாகை இடையே கரையை கடந்த கஜா புயல், பின்னர் வலுவிழந்து பிற்பகல் கேரளாவை நோக்கி நகன்றது.

தற்போது கேரளாவில் தாண்டவமாடி வரும் கஜா, இடுக்கி மாவட்டத்தில் கடுமையான சேதத்தை ஏற்படுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கேரளாவில் மையம் கொண்டுள்ள கஜா புயல், மேற்கு மற்றும் தென்மேற்கு, மத்திய கேரளாவில் கஜா புயல் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், அடுத்த 12 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும் என்றும் வானிலை மையம் அறிவித்து உள்ளது.

கடந்த ஆகஸ்டு மாதம் கேரளாவில் ஏற்பட்ட வரலாறு காணாத மழை வெள்ளம் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியிருந்தது. அப்போதும் இடுக்கி மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது கஜா புயல் காரணமாக இடுக்கி மாவட்டம் மீண்டும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளது.