‘கஜா’ புயல்: பாமக சார்பில் ரூ.1 கோடி நிவாரண உதவிகள் வழங்குவதாக அன்புமணி அறிவிப்பு

--

சென்னை:

ஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் வகையில் பாம்க சார்பில் ரூ.1 கோடி அளவிலான நிவாரண உதவிகள் வழங்கப்படும் என்று பாமக அறிவித்து உள்ளது.

கஜா புயல் காரணமாக தமிழகத்தின் டெல்டா மாவட்டம் கடுமையான சேதத்தை எதிர்கொண்டுள்ள நிலையில்,  திமுக சார்பில் ரூ.1 கோடி நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. மேலும்,  திமுக எம்எல்ஏக்கள், எம்.பி.க்களின் ஒரு மாத சம்பளமும் வழங்கப்படும் என்று திமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

அதைத்தொடர்ந்து தேமுதிக சார்பில் ஒருகோடி அளவில் நிவாரண பொருட்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் பல்வேறு கட்சியினர், தனியார் நிறுவனங்கள், திரையுலகை சேர்ந்தவர்கள் என பல தரப்பினரும் நிவாரணம் அளித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பாமக சார்பில் ரூ.1 கோடி அளவிலான நிவாரண உதவிகள் வழங்கப்படும் என்று பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்து உள்ளார்.