கஜா நிவாரணம்: அறிவிப்பு இன்றி உதவினார் நடிகர் அஜீத்

ஜா புயலால் நாகை, திருவாரூர், தஞ்சை மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.  ஐம்பது பேருக்குமேல் பலியாகியிருக்கிறார்கள். லட்சக்கணக்கான தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்துவிட்டன. ஆயிரக்கணக்கான கால்நடைகள் பலியாகிவிட்டன.

புயல் வீசி ஒரு வார காலமாகியும் இன்னும் பெரும்பாலான இடங்களுக்கு மின்சாரவசதி வரவில்லை. உணவு, குடிநீர் இல்லாமல் மக்கள் தவிக்கிறார்கள்.  அரசு நிவாரணங்கள் ஒருபுறம் நடந்தாலும் தன்னார்வலர்கள் பலர் களத்தில் இறங்கி உதவி செய்துவருகிறார்கள்.

 

கட்சித் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், தொழிலதிபர்கள் பலரும் நிவாரண உதவி அறிவித்துள்ளனர்.

ஆனால் எந்தவித அறிவிப்பும் இன்றி நடிகர் அஜீத், ரூ.15 லட்சம், முதல்வர் நிவாரண நிதிக்கு அளித்துள்ளார். கடந்த 21ம் தேதியே  அவர் கொடுத்துவிட்டார். ஆனால் இன்று (24.11.2018 ) தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையின் மூலமே இந்த விசயம் வெளியாகியிருக்கிறது.

 

இது குறித்து அஜீத் தரப்பில், “எப்போதுமே அவர் தான் செய்யும் உதவிகளை வெளியில் சொல்லிக்கொள்வதில்லை. அவருக்கு அரசியல் நோக்கம் இல்லை. தவிர ரசிகர் மன்றங்களை கலைத்துவிட்டதாக எப்போதோ அறிவித்துவிட்டார். அதனால் புயல் பாதிக்கப்பட்ட பகுதியில் மக்களுக்கு உதவுங்கள் என்று அவர் அறிக்கை எதுவும் வெளியிடவில்லை.  ஆனால் இன்னமும்  அவரது பெயரில் ரசிகர்கள் இயங்கி வருகிறார்கள். அவர்கள் களத்தில் உதவி செய்துகொண்டு இருக்கிறார்கள்” என்று  கூறுகிறார்கள்.

 

அஜீத் எப்போதுமே தனி ரகம்தான்!

#gaja #storm #Relief #ajith #helped #delta #people #without #notice