கஜா புயல் நிவாரணநிதி வழக்கு: மாநில பேரிடர் நிவாரண நிதியை பயன்படுத்த மத்தியஅரசு அனுமதி

சென்னை:

கஜா புயல் நிவாரண நிதி வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி தொடரப் பட்ட வழக்கில், மாநில பேரிடர் நிவாரண நிதியை பயன்படுத்திக்கொள்ள தமிழக அரசுக்கு  மத்தியஅரசு அனுமதி வழங்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கஜா புயல் நிவாரண நிதி குறித்த வழக்கில், நேற்றைய விசாரணையின்போது,  கஜா புயல் நிவாரண நிதி குறித்து மத்திய அரசு  எப்போது இறுதி அறிக்கை அளிக்கும் என்பது தொடர்பாக பதில் அளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை இன்றைக்கு ஒத்தி வைத்தனர்.

இந்த நிலையில் வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்,  மாநில பேரிடர் நிவாரண நிதியில் உள்ள ரூ.1277.62 கோடி தொகையை கஜா புயல் நிவாரணத்திற்கு தமிழக அரசு பயன்படுத்தி கொள்ளலாம் என்று தெரிவித்து உள்ளது.

புயல் நிவாரணம் தொடர்பான  வழக்கின் விசாரணையின்போது,  மத்திய அரசிடம், மாநில பேரிடர் நிவாரண நிதியில் போதுமான நிதி இருந்தும், தமிழகத்திற்கு ஒதுக்க மறுத்து வருகிறது என்று தமிழக அரசு வழக்கறிஞர் மத்திய அரசுமீது பகிரங்கமாக  குற்றம் சாட்டினார்.

அதைத்தொடர்ந்து, மத்திய அரசு பதில் தெரிவிக்கும்படி நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தனர்.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்,  மாநில பேரிடர் நிவாரண நிதியில் உள்ள ரூ.1277.62 கோடி தொகையை கஜா புயல் நிவாரணத்திற்கு தமிழக அரசு பயன்படுத்தி கொள்ளலாம்  என அனுமதி அளித்துள்ளதாக தெரிவித்தார்.

மேலும், கஜா புயல் பாதிப்பு தொடர்பாக தமிழகத்திற்கு மேலும் எவ்வளவு நிதி ஒதுக்கலாம் என்பதை 2 வாரத்தில் மத்திய அரசு அறிவிக்கும்  என்றும்  தெரிவித்தார்.

கார்ட்டூன் கேலரி