ரூ.1000 கோடி கஜா புயல் நிவாரண நிதி: தமிழக அரசு அரசாணை வெளியீடு

சென்னை:

ஜா புயல் நிவாரணப் பணிகளுக்கு ரூ.1000 கோடி நிதி ஒதுக்கியது குறித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

சென்னை கஜா புயல் நிவாரண உதவியாக உடனடியாக ரூ. 1000 கோடி ஒதுக்குவதாக தமிழக முதல்வர் கடந்த 20ந்தேதி அறிவித்திருந்தார். இந்த நிலையில், அதற்கான அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.

கடந்த 15ந்தேதி தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களை கஜா புயல் கடுமையாக தாக்கியது. இதன் காரணமாக வரலாறு காணாத சேதம் ஏற்பட்டது.  தென்னை மற்றும் வாழை மரங்கள் லட்சக்கணக்கில் அடியோடு சாய்ந்துள்ளது. நிவாரணப் பணிகளில் அரசு ஊழியர்களும் தன்னார்வ தொண்டர்களும் பெருமளவில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நிவாரண பணிகளுக்காக உடனடியாக ரூ.1000 கோடி ஒதுக்குவதாக தமிழக முதல்வர் அறிவித்த நிலையில் இன்று அரசு சார்பில் அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.

அதில்,  விவசாயத்துக்கு ரூ.350 கோடி. பயிர் பாதிப்பிற்கு ரூ.350 கோடி, குடிநீர், சாலை கட்டமைப்பிற்கு ரூ.102 கோடி என பிரிவு வாரியாக நிதி ஒதுக்கி அரசாணை வெளியிட்டுள்ளனர்.

1. உயிரிழப்பு, கால்நடை, உடைமைகளுக்காக ரூ. 205.87 கோடி

2. வீடுகள் சேதம் – ரூ. 100 கோடி

3. பயிர் சேதம் – ரூ. 350 கோடி

4. சாலை, குடிநீர் உட்பட உள்கட்டமைப்பு – ரூ. 102.5 கோடி

5. மீன்வளம் – ரூ. 41.63 கோடி

6. மின்சாரம் – ரூ.200கோடி

மொத்தம்- ரூ.1000 கோடி