நிவாரண பணிகளில் வேகமில்லை… முதல்வரின் நாகை பயணம் ரத்து!

கஜா புயலால் நாகையில் பாதிக்கப்பட்டு இருக்கும் பகுதிகளை பார்வையிட திட்டமிட்டு இருந்த தமிழக முதல்வர் பழனிச்சாமி தனது பயணத்தை ரத்து செய்துள்ளார்.

கஜா புயல் நாகை, திருவாரூர், தஞ்சை, புதுகை உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் பெரும் அழிவை ஏற்படுத்தி இருக்கிறது.   இம்மாவட்டங்களல் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.

 

இந்த புயலால் நாகையில் பாதிக்கப்பட்டு இருந்த பகுதிகளை முதல்வர் பழனிச்சாமி இன்று பார்வையிட திட்டமிட்டு இருந்தார். இன்று காலை அவர் சென்னையில் இருந்து நாகை புறப்படுவதாக இருந்தது.

ஆனால் கடைசி நேரத்தில் தனது பயணத்தை முதல்வர் பழனிச்சாமி  ரத்து செய்தார். இரண்டு நாட்கள் கழித்து முதல்வர் நாகை செல்ல இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிவாரண பணிகள் மிக மெதுவாக நடப்பதால்,வரின் பயண திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும்  நிவாரண பணிகளை வேகமாக முடிக்குமாறு அவர் அதிகாரிகளுக்கு ஆணையிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.