கஜா புயல் பாதிப்பு: நடிகர் ரஜினிகாந்த் ரூ.50 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் அனுப்ப முடிவு

சென்னை:

ஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமாக ரூ.50 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்களை நடிகர் ரஜினிகாந்த்  அனுப்ப இருக்கிறார்.  இந்த நிவாரண பொருட்கள் ரஜினி காந்த் மக்கள் மன்றம் மூலமாக வழங்கப்படும் எனவும் தெரிவித்து உள்ளார்.

கடந்த 15ந்தேதி தமிழகத்தை புரட்டிப்போட்ட  ‘கஜா’ புயலுக்கு,  நாகை, புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சை, கடலூர் உள்பட  கடலோர மாவட்டங்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகின. அந்த பகுதியில் உள்ள லட்சக்கணக்கான ஏக்கர் பயிர்களும், மரங்களும், வீடுகளும், பொருட்களும் சேதம் அடைந்தன.

புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு மற்றும் தனியார் அமைப்புகள் நிவாரணங்கள் செய்து வருகின்றன.   தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும்  நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

ஏற்கனவே திரையுலகை சேர்ந்த நடிகர் சிவக்குமார், விஜய், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், கவிஞர் வைரமுத்து உள்பட ஏராளமானோர் நிவாரணி பணிகளை முடுக்கி விட்டுள்ளனர். இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த், கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.50 லட்சம் மதிப்பில் நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பதாக தெரிவித்து உள்ளார்.

சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் சேமிக்கப்பட்டு வரும் நிவாரண பொருட்கள் நாளை அனுப்பி வைக்கப்பட இருப்பதாகவும், இந்த நிவாரணங்கள் அனைத்தும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரஜினி மன்ற நிர்வாகிகள் மூலமாக நேரடியாக கொண்டு சேர்க்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may have missed