கொரோனா பீதியிலும் நட்சத்திர ஓட்டலில் சூதாட்டம்… 18 பேரை அள்ளிய காவல்துறை…

சென்னை:

மிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில், தலைநகர் சென்னையில் தொற்று பரவல் உச்சத்தில் உள்ளது. இதனால் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, தொற்று பரவாமல் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

சென்னையில் கொரோனா அச்சம் காரணமாக மக்கள் பிதியில் உள்ள நிலையில், சென்னை கோயம்பேடு மேம்பாலம் அருகே உள்ள பிரபல நட்சத்திர  ஓட்டலில் சூதாட்டம் நடைபெறுவதாக கிடைத்த தகவலையொட்டி, அங்கு அதிரடி சோதனை நடத்திய காவல்துறையினர், சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த  18 பேரை கைது செய்தனர். அவர்களிடம்  இருந்து ரூ.2.40 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.