விரைவில் வருகிறது எச்பிஓ நிறுவனத்தின் ‘ஹவுஸ் ஆஃப் தி ட்ராகன்’ ….!

உலகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்ற தொடர் ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’. 8 சீசன்களைக் கொண்ட இத்தொடர் கடந்த ஆண்டு நிறைவுபெற்றது. இத்தொடரை எச்பிஓ நிறுவனம் தயாரித்திருந்தது.

இந்நிலையில் இத்தொடருக்கு முந்தைய கதையை வெப் சீரிஸாக எடுக்கவுள்ளதாக எச்பிஓ நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தக் கதை ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ நிகழ்வுகள் நடக்கும் காலத்துக்கு 300 ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டத்தில் நடப்பது போன்ற கதைக்களத்தைக் கொண்டது.

இத்தொடருக்கு ‘ஹவுஸ் ஆஃப் தி ட்ராகன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.இதை 10 எபிசோட்களாக எடுக்க எச்பிஓ நிறுவனம் திட்டமிட்டுள்ளது.இத்தொடரை ரயான் கோன்டால், மிக்யுல் ஸ்போச்னிக், உள்ளிட்டோர் இயக்கவுள்ளனர்.