தனுஷ் பட நடிகையின் கொரோனா டைம் பாஸ்..

கேம் ஓவர்  படத்தில் நடித்தவர் சஞ்சனா நடராஜன். அடுத்த தனுஷ் நடிக்கும் ’ஜெகமே தந்திரம்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். உற்சாகமாக இருக்கிறார். இப்படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்கி உள்ளார்.


கொரோனா தனிமைப்படுத்தலின்போது சஞ்சனா எப்படி நேரத்தை கழித்தார் என்று கூறினார். அவர் கூறியதாவவது:
முதல் சில வாரங்கள் மிகவும் கடினமாக இருந்தது, பிறகு பழகிவிட்டது. எனக்கு பிடித்த படங்கள் பார்ப்பதில் நேரத்தை செலுத்தினேன். சமையல், பேக்கிங் செய்ய கற்றுக் கொண்டேன். அதை ஒவ்வொரு நாள் ஒத்திவைத்த எல்லாவற்றையும் மறுநாள் செய்தேன்.
நான் ஒரு சில ஃபேஸ்டைம் படப்பிடிப்புகளை செய்தேன். இது ஒரு வித்தியாசமான அனுபவம்., இவ்வாறு சஞ்சனா நடராஜன் கூறினார்.
ஜெகமே தந்திரம் படம் அண்டர்வேர்ல்டு டான் கதையாக உருவாகி இருக்கிறது. இதில் வித்தியா சமான கெட்டப்பில் தனுஷ் நடிக்கிறார். ஐஸ்வர்யா லட்சுமி ஹீரோயினாக நடிக்கிறார். கொரோனா ஊரடங்கால் இப்படம் வெளிவரமல் இருக்கிறது. தியேட்டர்கள் திறக்கப்பட்டதும் இப்படம் வெளியாகும்.