தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமான டாப்ஸி சிறு இடைவெளிக்குப் பிறகு ‘கேம் ஓவர்’ படம் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவுக்கு வந்திருக்கிறார்.

சஸ்பென்ஸ் திரில்லர் படமான இப்படத்திற்கு சென்சார் குழுவினர் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர். மேலும், படத்தை ஜூன் மாதம் 14 ஆம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

இப்படத்தில் வினோதினி, ரம்யா, சஞ்சனா நடராஜன், அனீஸ் குருவில்லா, மாலா பார்வதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஏ.வசந்த் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு ரான் இதான் யோஹான் இசையமைக்க, ரிச்சர்டு கெவின் படத்தொகுப்பு செய்கிறார். ரியல் சதீஷ் ஆக்‌ஷன் காட்சிகளை வடிவமைக்க, சிவசங்கர் கலையை நிர்மாணிக்கிறார். அஷ்வின் சரவணனுடன் இணைந்து காவ்யா ராம்குமார் இப்படத்தின் கதை எழுதியிருக்கிறார்