வண்ணமயமாக நிறைவு பெற்ற ஆசிய விளையாட்டு போட்டிகள்

இந்தோனேசியாவின் ஜகார்தா நகரில் ஆசிய விளையாட்டுப் போட்டி நிறைவு விழா கோலாகலமாக தொடங்கி முடிவு பெற்றது. இதில் இந்தியா சார்பில் தேசியக் கொடியை மகளிர் ஹாக்கி அணி கேப்டன் ராணி ராம்பால் ஏந்தி சென்றார்.

Asiad

18வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இம்மாதம் 18ம் தேதி இந்தோனேசியாவில் உள்ள ஜகர்த்தா நகரில் கோலாகலமாக தொடங்கியது.இதில் இந்தியா, சீனா, ஜப்பான், கொரியா, பாக்கிஸ்தான், மலேசியா உள்ளிட்ட 45 நாடுகளை சேர்ந்த 11 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்று ஆரமபமான ஆசிய விளையாட்டுப் போட்டித் தொடர் இன்றுடன் நிறைவடைந்தது.

asiad

இதில் இந்தியாவைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பதக்க வேட்டை நடத்தினர் . இந்த போட்டிகளில் இந்தியா 15 தங்கம், 24 வெள்ளி மற்றும் 30 வெண்கலப் பதக்கங்கள் என மொத்தமாக 69 பதக்கங்களை பெற்றுள்ளது. இதுவரை இல்லாத அளவில் ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியா அதிக பதக்கங்களை இந்த ஆண்டு பெற்று சாதனை படைத்தது.

asiad2

இதையடுத்து இந்த போட்டிகள் வென்றிகரமாக நடந்து முடிக்க உதவிய அனைவருக்கும் தனது நன்றியை ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் தலைவர் ஷேக் அஹமது தெரிவித்தார். இந்த ஆசிய விளையாட்டு போட்டிகளில் 132 தங்கம், 92 வெள்ளி, 65 வெண்கலப் பதக்கங்கள் என மொத்தமாக 289 பதக்கங்களைப் பெற்று சீனா தொடர்ந்தும் பதக்கப்பட்டியலில் முதல் இடத்தை பிடித்தது.

asiad

இதனையடுத்து ஜப்பான் 75 தங்கப்பதக்கங்கள், 56 வெள்ளிப் பதக்கங்கள், 74 வெங்கலப்பதக்கங்கள் என மொத்தமாக 205 பதக்கங்களைப் பெற்று இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. இந்தியா 15 தங்கம், 24 வெள்ளி, 30 வெண்கல பதக்கம் என மொத்தம் 69 பதக்கங்களை வென்று 8 ஆவது இடத்தில் உள்ளது.

இதனை தொடர்ந்து வரும் 2020ம் ஆண்டு டோக்கியோவிலும், 2024 பாரீஸிலும், 2028 லாஸ் ஏஞ்சலஸிலும் ஆசிய விளயாட்டுப் போட்டிகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.